எறிபந்து போட்டியில் எத்திராஜ் மகளிர் கல்லுாரி சாம்பியன்
எறிபந்து போட்டியில் எத்திராஜ் மகளிர் கல்லுாரி சாம்பியன்
UPDATED : பிப் 08, 2015 12:00 AM
ADDED : பிப் 08, 2015 10:23 AM
அ நிறம் | அளவு
எழும்பூர்: கல்லுாரி அளவிலான, எறிபந்து போட்டியில், எத்திராஜ் மகளிர் கல்லுாரி அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
வேலுார் வி.ஐ.டி., சார்பில், அதன் வளாகத்தில் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. மகளிர் எறிபந்து இறுதி போட்டியில், சென்னை எத்திராஜ் கல்லுாரி அணி, 22-25, 25-18, 25-23 என்ற செட் கணக்கில், வேலுார் வி.ஐ.டி., பல்கலை அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது.
அரையிறுதி போட்டியில், எத்திராஜ் மகளிர் கல்லுாரி அணி, ஜெ.பி.ஏ.எஸ்., கல்லுாரி அணியை தோற்கடித்து இருந்தது.
