அறிவியல் ஆய்விற்கு மாணவர்; மருத்துவமனை டிரஸ்ட் தீர்மானம்
அறிவியல் ஆய்விற்கு மாணவர்; மருத்துவமனை டிரஸ்ட் தீர்மானம்
UPDATED : அக் 24, 2015 12:00 AM
ADDED : அக் 24, 2015 10:47 AM
புதுச்சேரி
:
பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் 1௦ மாணவர்களை
தேர்ந்தெடுத்து அறிவியல் ஆய்வுக்கு ஊக்குவிக்க தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க புற்றுநோய் மருத்துவமனை டிரஸ்ட்
தீர்மானித்துள்ளது.
புதுச்சேரி புற்று நோய் மருத்துவமனை டிரஸ்ட் உறுப்பினர் களின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டாக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். டாக்டர் ராஜ்குமார் செல்வ நாதன் முன்னிலை வகித்தார். டாக்டர் துளசிமணி, பொறியா ளர்கள் குருமூர்த்தி, பிரபாகரன் மற்றும் சலீம், அய்யப்பன், சேகர், வைத்தியநாதன், மோகன், விஜயகுமார் பங்கேற்றனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இளம்பிள்ளை வாதத்தால் பாதித்த குழந்தைகளுக்கு, ஏவுகணை தயாரிக்க பயன்படும் எடை குறைவான உலோகத்தில் 3௦௦ கிராம் எடையில் செயற்கை கால்களை தயாரித்து வழங்கினார். இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்படும் விலை உயர்ந்த ஸ்டென்ட் வளையத்தை குறைந்த விலையில் தயாரித்துக் காட்டினார். மருத்துவத்துறையில் சாதனைபுரிந்த அப்துல்கலாம் பாதையை பின்பற்றி புதுச்சேரி புற்றுநோய் மருத்துவமனை சார்பில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் திட்டம் துவக்க உள்ளனர்.
இத்திட்டத்தின் படி புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களில் ஆண்டு தோறும் 1௦ மாணவர்களை தேர்வு செய்து, அறிவியல் ஆய்வுக்கு ஊக்குவிக்க மாணவருக்கு ரூ.1௦ ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் பிறந்த நாளான அக்.15 அன்று ஆண்டு தோறும் கருத்தரங்கம் நடத்தும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
