தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி


UPDATED : அக் 26, 2015 12:00 AM

ADDED : அக் 26, 2015 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2015 12:00 AM ADDED : அக் 26, 2015 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது குறித்து
, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பெங்களூருவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பயின்றாலும், மாணவ மாணவியரால், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிவதில்லை; ஆங்கிலத்தில் நூறு மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் கூட, தட்டுத்தடுமாறியே பேசுகின்றனர். இதனால், நேர்முக தேர்வில் ஆங்கிலத்தில் பேச முடியாமல் பின்னடைவை சந்திக்கின்றனர். ஆங்கிலத்தில் பேச, மாணவர்கள் மத்தியில் தயக்கமும், கூச்சமும் அதிகமாக உள்ளது.

இதற்கு தீர்வாக, அரசு பள்ளிகளில் துவக்க வகுப்பு நிலையில் இருந்து, மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச, பயிற்சி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி தரப்படுகிறது. எளிமையான வார்த்தைகளை தேர்வு செய்து பேசும் விதம், உச்சரிப்பு முறை, தயக்கமின்றி பொது இடங்களில் ஆங்கிலத்தில் ஒருவருக்கு ஒருவர் உரையாடுதல் போன்ற பயிற்சிகள் தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூருவில் உள்ள தென்னிந்திய ஆங்கில பயிற்சி மண்டல மையத்தில், நவ., 2 முதல், டிச., 1 வரை, ஒரு மாதம் பயிற்சி தரப்பட உள்ளது. இதற் காக, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள, 150 ஆசிரியர்கள் தேர்வு செய்யப் பட்டு, இப்பயிற்சிக்கு அனுப்ப உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us