தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு தேர்வில் பிற மொழி மாணவர்கள் தோல்வி!

காலாண்டு தேர்வில் பிற மொழி மாணவர்கள் தோல்வி!

காலாண்டு தேர்வில் பிற மொழி மாணவர்கள் தோல்வி!


UPDATED : அக் 28, 2015 12:00 AM

ADDED : அக் 28, 2015 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2015 12:00 AM ADDED : அக் 28, 2015 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்
: ஓசூர் கல்வி மாவட்டத்தில்
, நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், பிற மொழி பாட மாணவர்கள், 50 சதவீதம் பேர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறாததால், தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களை தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓசூர் கல்வி மாவட்டத்தில், ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 41 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 20 மேல்நிலைப்பள்ளி, 3 கன்னட உயர்நிலைப்பள்ளி, இரு உருது உயர்நிலைப்பள்ளி, இரு மேல்நிலைப்பள்ளி என, மொத்தம், 68 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இதில், 5,568 எஸ்.எஸ்.எல்.சி., மாணவ, மாணவியர் தெலுங்கு பாடமும், 625 பேர் கன்னடமும், 680 பேர் உருது பாடத்தை முதன்மை பாடமாகவும் எடுத்து படித்து வருகின்றனர். 

இதன்படி, மொத்தம், 6,873 மாணவ, மாணவியர், தமிழ் தவிர பிறமொழி பாடத்தை, தாய்மொழியாக கொண்டு, படித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12 ம் தேதி, தமிழக அரசு கொண்டு வந்ததால், நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்து வரும் பிற மொழி மாணவ, மாணவியர், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 2006-2007 ம் கல்வியாண்டு முதல், தெலுங்கு, கன்னடம், உருது பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, தமிழ் மொழி பாடம் கற்று கொடுக்கப்பட்டு வருவதால், அவர்கள் நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று விடுவார்கள் என, ஓசூர் கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறி வருகின்றனர். 

ஆனால், நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., காலாண்டு தேர்வில், கன்னடம், தெலுங்கு, உருது என பிற மொழியில் படித்து, தமிழ் பாட தேர்வு எழுதிய, 6,873 மாணவ, மாணவியரில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், 35 மதிப்பெண் கூட பெற முடியாமல் தேர்வில் தோல்வி அடைந்தனர். இதை அறிந்த ஓசூர் கல்வி மாவட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களை அழைத்து, பிற மொழிப்பாட மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என, கூறியுள்ளனர். 

இதனால், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு மீண்டும் தேர்வு நடத்தி, அவர்களுக்கு விடைத்தாள்களை வழங்கி, 35 மதிப்பெண் பெற வைத்துள்ளனர். இதையறிந்த தெலுங்கு அமைப்புகள் நவம்பர், 1 ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் ராஜா கூறியதாவது:

ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள, அனைத்து பிற மொழி பள்ளிகளிலும், தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். காலாண்டு தேர்வில் பிற மொழிப்பாட மாணவர்கள் அதிகளவில், தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மறுத்தேர்வு எதுவும் பள்ளிகளில் நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us