தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆரம்பக் கல்வியில் தாய்மொழி இலக்கிய பொழில் மன்றம்!

ஆரம்பக் கல்வியில் தாய்மொழி இலக்கிய பொழில் மன்றம்!

ஆரம்பக் கல்வியில் தாய்மொழி இலக்கிய பொழில் மன்றம்!


UPDATED : நவ 07, 2015 12:00 AM

ADDED : நவ 07, 2015 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2015 12:00 AM ADDED : நவ 07, 2015 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இலக்கியப் பொழில் மன்ற நிறுவனர் பராங்குசம் விடுத்துள்ள அறிக்கை:

கல்வி அவரவர் தாய் மொழியில் அமைய வேண்டும் என உலகம் முழுவதும் பின்பற்றும் போது, தமிழகம், புதுச்சேரியில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது.

தமிழக அரசும், புதுச்சேரி அரசும் தமிழ் மொழியை ஒதுக்கி, ஆங்கில மொழியை பயிற்று மொழியாக வைத்து, தமிழ் மொழியை அழிக்கும் செயலை செய்கின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி, பெங்களூருவில் மாநில கல்வி அமைச்சர்களின் கூட்டத்தை கூட்டி, தாய் மொழிக் கல்வியை பற்றி ஆலோசனை நடத்தினார். 

அதில், 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை படிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை உருவாக்க முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த கல்வி முறையை வரும் கல்வி ஆண்டிலேயே துவக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us