மாணவர்கள் மீது தாக்குதல்; நடத்திய போலீசுக்கு அபராதம்
மாணவர்கள் மீது தாக்குதல்; நடத்திய போலீசுக்கு அபராதம்
UPDATED : டிச 06, 2015 12:00 AM
ADDED : டிச 06, 2015 08:31 AM
கொழும்பு
: இலங்கையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சர்வதேச சட்டத்தை மீறி
தாக்குதல் நடத்திய போலீசாருக்கு, அந்நாட்டு மனித
உரிமை கமிஷன்அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக, இலங்கை மனித உரிமை கமிஷனின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில், அக்டோபர், 29ல் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது குரூரத்துடனும், இழிவான முறையிலும் போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால், ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை இலங்கை அரசியல் சட்டமும், சர்வதேச சட்டமும் வழங்கியுள்ளன.
போலீசார் நடத்திய தாக்குதல், இந்த அடிப்படை உரிமையை மீறியதாகும். எனவே, தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, 67 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 96 லட்சம் ரூபாயை, போலீசார் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
