தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தோல் பொருட்கள் வடிவமைப்பு; பட்டயப் படிப்பு அறிமுகம்

தோல் பொருட்கள் வடிவமைப்பு; பட்டயப் படிப்பு அறிமுகம்

தோல் பொருட்கள் வடிவமைப்பு; பட்டயப் படிப்பு அறிமுகம்


UPDATED : டிச 10, 2015 12:00 AM

ADDED : டிச 10, 2015 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2015 12:00 AM ADDED : டிச 10, 2015 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திகிராமம்
: காந்திகிராம பல்கலை மனையியல் துறையில்
, இளநிலை தோல் மற்றும் சார் பொருட்கள் வடிவமைப்பு குறித்த மூன்றாண்டு பட்டயப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 6 மாதம் சான்றிதழ் படிப்பு, ஓராண்டு சான்றிதழ் படிப்பு, 2 ஆண்டுகள் டிப்ளமோ சான்றிதழ் படிப்பும் அறிமுகமாகியுள்ளது. இதற்காக பல்கலைக்கழக

மானியக்குழு (யு.ஜி.சி.,) நிர்வாகத்தின் கீழ் இயங்கும் (கவுசில் கேந்திரா) பாடத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மையம், காந்திகிராம பல்கலையின் மனையியல் துறைக்கு ரூ.3.70 கோடியை வழங்கியுள்ளது. மனையியல் துறை பேராசிரியை சத்யா கூறியதாவது: 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் இதில் சேரலாம். கிராமப்புற வளர்ச்சி நோக்கமாக கொண்டு இந்த

படிப்புக்கள் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளன. 80 சதவீத தொழிற்சாலை பயிற்சி உண்டு.தற்போது மூன்று படிப்புக்களுக்கான சேர்க்கை டிச.,31 வரை நடக்க உள்ளது. கல்விக் கட்டணம் ரூ.6 ஆயிரம். சேர விரும்புவோர் 94438 - 96177ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

பதவி உயர்வு இல்லாமலேயே பணிஓய்வு: பரிதவிக்கும் ரேடியாலஜி நிபுணர்கள்

மதுரை,:அரசு மருத்துவக் கல்லுாரிகள் பெரும்பாலானவற்றில் ரேடியோலஜி முதுநிலை படிப்பு இல்லாததால், டிப்ளமோ முடித்த டாக்டர்கள், பதவிஉயர்வு இல்லா

மலேயே பணிஓய்வு பெறுகின்றனர்.தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மூன்றில் மட்டுமே ரேடியாலஜி முதுநிலை பாடத்திட்டம் உள்ளது. நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் ரேடியாலஜி நிபுணரின் பங்கு முக்கியம். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் இல்லாமல் சிகிச்சை அளிப்பது இயலாத விஷயம்.வயிற்றுவலி, பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்களை கண்டறிவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமே சாத்தியம். ரேடியாலஜி பிரிவில் முதுநிலை பட்டம் முடித்தவர்கள் தான், கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும்; பதவிஉயர்வும் பெறமுடியும். டிப்ளமோ பாடம் நடத்துவதற்கு கூட எம்.டி., முடித்தவர்கள் தான் தேவை.மருத்துவக் கல்லுாரி ஆரம்பித்தால் முதுநிலையில் பொதுமருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு, மயக்கவியல், ரேடியாலஜி பிரிவுகள் அவசியம் தேவை. ரேடியாலஜியில் இரண்டாண்டு டிப்ளமோ படிப்புகள் தான் நிறைய கல்லுாரிகளில்உள்ளன. இப்படிப்பை முடித்தாலும் ஆசிரியராக முடியாது; பணிஓய்வு வரை பதவி உயர்வு பெறமுடியாது.

பழமைவாய்ந்த மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் கூட முதுநிலை ரேடியாலஜி படிப்பு இல்லை. ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்ட எட்டு அரசு மருத்துவக் கல்லுாரிகளிலாவது முதுநிலை படிப்பை கொண்டு வந்தால் தான், கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அரசு இப்படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us