பிறமொழி கலக்கும் தமிழ் மாணவர்கள்; பேராசிரியர் வேதனை
பிறமொழி கலக்கும் தமிழ் மாணவர்கள்; பேராசிரியர் வேதனை
UPDATED : டிச 18, 2015 12:00 AM
ADDED : டிச 18, 2015 11:05 AM
திண்டுக்கல்
: மாணவர்களிடையேயான பேச்சில், தமிழ் வார்த்தைகளின் பயன்பாடு குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறதுஎன,
காந்திகிராம பல்கலை தழிழ்த்துறை சார்பில் நடந்த
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிட்டன் பேராசிரியர் சிவாபிள்ளை தெரிவித்தார்.
காந்தி கிராம பல்கலை தமிழ்த்துறை சார்பில் கற்றல் கற்பித்தல் முறைகளில் மேம்படுத்தப்பட்ட நிலைகள் எனும் தலைப்பில் சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார்.லண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலையின் கலை பண்பாட்டுத்துறை பேராசிரியர் சிவாபிள்ளை,சிக்காக்கோ தமிழ் ஆர்வலர் ஆல்பர்ட் பங்கேற்றனர்.
சிவாபிள்ளை பேசியதாவது:
மாணவர்கள் நாடு, மண் சார்ந்து மொழிகளை கற்பது அவசியம். இணைய தளங்களை பயன்படுத்தி புதிய தேடல்களில் ஈடுபட வேண்டும். லண்டன் கோல்ட் ஸ்மித் பல்கலையில் மொழித்திறன் ஆய்வுகள் நடக்கின்றன. பிறமொழிகளை கற்பதில் பிரிட்டன் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
நான் பல்வேறு
நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். அந்நாடுகளில் தமிழர்கள் பேச்சுத் தமிழில்
முறையாக வார்த்தைகளை பயன்படுத்தி அழகுற பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் குறிப்பாக தமிழை படிக்கும் மாணவர்கள் பேச்சுத்
தமிழில் பிற மொழி வார்த்தைகளை கலந்து பேசுவது அதிகரித்துள்ளது.
இதில், தமிழகத்தில் வயதானவர் முதல் சிறுவர் வரை ஆங்கில வார்த்தைகளை
பயன்படுத்துகின்றனர். இந்த நிலை மிகுந்த வேதனை அளிக்கிறது. இதற்காக மாற்று
பேச்சுத்தமிழ் வார்த்தைகளை தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்,
என்றார்.
