தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/’சென்டம்’ பெற வழிகாட்டிய ’தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்’

’சென்டம்’ பெற வழிகாட்டிய ’தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்’

’சென்டம்’ பெற வழிகாட்டிய ’தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்’


UPDATED : டிச 28, 2015 12:00 AM

ADDED : டிச 28, 2015 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2015 12:00 AM ADDED : டிச 28, 2015 01:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற ஆலோசனைகள் வழங்கும், ’ஜெயித்துக் காட்டுவோம்நிகழ்ச்சியை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ’தினமலர் டி.வி.ஆர்., அகாடமிசிறப்பாக நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, பல மாவட்டங்களில் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னை மாவட்ட மாணவர்களுக்காக நேற்று(27-ம் தேதி) நடந்தது.

சென்னை பல்கலை நுாற்றாண்டு மண்டபத்தில், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, இரண்டு பிரிவுகளாக நடந்தது. காலை, 9:00 மணி முதல், 1:00 மணி வரை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும்; பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கும் கல்வி ஆலோசனை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காலை, 6:00 மணிக்கே பல்கலை வளாகத்தில், மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் குவிந்தனர். இதே போல், பிற்பகல் நிகழ்ச்சிக்காக, காலை, 11:00 மணி முதலே மாணவ, மாணவியர் காத்திருந்து, கல்வி ஆலோசனைகளை பெற்றனர்.

தினமலர்ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ண மூர்த்தி, நிகழ்ச்சியில் பங்கேற்று, முந்தைய பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். கல்வியாளர் ரமேஷ் பிரபா, கல்வியில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் ஜெயிப்பது எப்படி என, தன்னம்பிக்கை ஆலோசனை வழங்கினார்.

படித்ததை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி; பயமின்றி தேர்வை சந்திப்பது எப்படி; தன்னம்பிக்கையை வளர்த்து தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளுவது எப்படிஎன, திறன்மிக்க, அனுபவமிக்க ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்கினர்.

தேர்வில் எந்த பாடத்தில் எத்தனை மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும், எந்த பாடங்கள் முக்கியமானவை, புத்தகத்திலுள்ள முக்கியமான கேள்வி, பதில்கள் மற்றும் பாடங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.

அனைத்து பாடங்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிகளிலும், ’பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்முறையில், பாடங்கள் குறித்த முக்கிய குறிப்புகளை வழங்கினர். மேலும் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு பதில் பெற்று, அவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப, பாடங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்தனர். 

உழைத்து கொண்டே இருங்கள் மாணவர்களே!

சென்னை மாவட்டத்தில், கடந்த ஆண்டில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, ’தினமலர்நிறுவனர், டி.வி.ராமசுப்பையர் உருவம் பொறித்த வெள்ளி பதக்கங்களையும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, ’2020நுால்களையும், ’தினமலர்நாளிதழின் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

பதக்கங்களையும், நுால்களையும், மாணவர்களுக்கு பரிசளித்து, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: நீங்கள் எல்லாம் இங்கு கூடியிருப்பதை கண்டு, நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள், கடந்த, 15 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை அரும்பாடுபட்டு நடத்தி வருகிறோம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள், பொதுத்தேர்வில் வெற்றி பெற திணறுவதை கண்டு, அவர்களும் கல்வியில் மேன்மை அடைய வேண்டும். அவர்களுக்கு வழிகாட்ட, நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் துவக்கப்பட்டது தான் இந்த நிகழ்ச்சி. அது, இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என நினைக்கவில்லை.

உங்களிடம் ஒரே ஒரு வேண்டு கோள் வைக்கிறேன். வாழ்க்கை பாதை என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை; கடின உழைப்பு இருந்தால் தான் முன்னேற முடியும். தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள். உழைத்து கொண்டே இருங்கள்; படித்துக் கொண்டே இருங்கள்; தேர்வில் வெற்றி பெறலாம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

நேர்வழி வெற்றியே திருப்தி தரும்!: கல்வியியல், ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசியதாவது:

சென்னையில் பெய்த கன மழையின் காரணமாக, அதிக நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த நாட்களில் படிக்க வேண்டியவற்றையும், தற்போது சேர்த்து படிக்க வேண்டிய சூழல். ஒவ்வொரு ஆண்டும், செய்தித்தாள்களில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்ற செய்தி வருகிறது. அதே நேரம், ’பிளஸ் 2படிப்பில், எட்டு லட்சம் பேர் சேர்வதாகவும் செய்திகள் வருகின்றன.

இதற்கிடையே, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., உள்ளிட்ட தொழிற்கல்வியில் சேருவோர் போக, மீதி உள்ளோர், 10ம் வகுப்பில், தோல்வி அடைகின்றனர் என்ற வருத்தமான செய்திகளும் கிடைக்கின்றன. இந்த, தோல்வி சதவீதத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தான், ஒவ்வொரு ஆண்டும், ’ஜெயித்துக்காட்டுவோம்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பாலிடெக்னிக்:

உங்கள் வீட்டில், ’பிளஸ் 2வரை படித்து, அதன் பின் பட்டப்படிப்பு படிக்க வைக்கக்கூடிய சூழல் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாலிடெக்னிக் சேர்ந்து விடுங்கள். மூன்றாண்டுகளுக்குள் பலருக்கு, பொருளாதாரம் மேம்பாடடைந்து விடும். அப்போது, லேட்டரல் என்ட்ரி முறையில், இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் வகுப்பில் சேர்ந்து விடலாம்; அதனால், கால விரயம் ஏற்படாது. மாணவர்கள், தேர்வுக்கு முன், தேர்வுக்கு பின் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு, கடைபிடித்தால் தான், அதிக மதிப்பெண்களை பெற முடியும். 

குறிப்பாக, தேர்வுக்கு முன், ஐந்தாண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை, ஒரு அனுமானத்திற்காக தான் படிக்க வேண்டும். அதை வைத்துக்கொண்டு, இப்படி தான், இந்த பாடத்தில் இருந்து தான், கேள்விகள் கேட்கப்படும் என்று, சுயமாக ஜாதகம் கணிக்கக்கூடாது. தேர்வு கூடத்திற்கு, அரை மணி நேரம் முன் செல்வது நல்லது. ஒரு மணி நேரத்திற்கு முன் சென்றால், அங்கு வரும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது, அவர்கள் கூறும் வினாக்களை படிக்கவில்லை என்றால் பதற்றமடைவது உள்ளிட்ட செயல்கள், மறதியை உண்டாக்கும். அதனால், அடுத்தவர்களிடம் ஆலோசனை கூறவோ, கேட்கவோ வேண்டாம்.

பதற்றம் வேண்டாம்:

தேர்வு கூடத்திற்கு சென்றவுடன், வினாத்தாளை கூர்ந்து படித்து, தெரிந்தவற்றை வரிசைப்படி எழுத வேண்டும் அதை விடுத்து, தண்ணீர் குடிக்க எழும் மாணவன், கூடுதல் விடைத்தாள் வாங்கும் மாணவன், பறக்கும் படையின் செயல்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி, நேர விரயம் செய்தால், கடைசி நேரத்தில் பதற்றம் ஏற்படும்.

துண்டு சீட்டில் விடை எழுதி செல்லும் கெட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள். குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால், வெற்றி நிலைக்காது. நேர்வழியில் வெற்றி பெற்றால் தான் திருப்தி கிடைக்கும். இந்த வயதில் அதனை நோக்கி நடைபோடுங்கள். அதே நேரம், வெற்றி, தோல்வியை சமமாக பார்க்கும் மன நிலையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு, எதிர்பாராத விதமாக தேர்வில் தோல்வி கிடைத்தாலும், எதிர்மறையான முடிவுகளை எடுக்காதீர்கள்.

நேர்மையாக சிந்தித்தால், வெற்றி எளிதில் கிடைக்கும். பெற்றோருக்கு பெருமை தேடி தரவேண்டும் என்பதற்காக உழையுங்கள். வாழ்த்துக்கள்! இவ்வாறு அவர் பேசினார்.

அறிவு எது; உணர்ச்சி எது?: நிகழ்ச்சியில், கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது: 

மற்ற வகுப்புகளை விட, பிளஸ் 2 மிக முக்கியமான கட்டம். பிளஸ் 2 மதிப்பெண் பெறுவதிலும், தேர்ச்சியிலும் தான், உங்கள் எதிர்காலத்தின் நிலை உள்ளது. அதனால், அதிக மதிப்பெண் பெற தயாராகுங்கள். அதேபோல், தேர்வு முடிவு வரும் போது என்ன மதிப்பெண் கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ற மேல்படிப்புக்கு தயாராக வேண்டும். அதேபோல், தேவையற்ற பருவ உணர்ச்சிக்கும், காதல் என்ற பெயரிலான விடலைப் பருவ ஈர்ப்புக்கும் ஆளாகிவிடக் கூடாது. பிளஸ் 2 முதல் கல்லுாரி வரையில் தான், உங்கள் வயது எதையும் அறிந்து கொள்ள முடியாத, முடிவெடுக்க தெரியாத வயது. அந்த நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்தி, அறிவை பயன்படுத்த வேண்டும். அறிவை பயன்படுத்துவோர், உணர்ச்சிக்கு ஆளாகமாட்டார்கள். தேவையற்ற சிந்தனை வருகிறதா, உங்கள் குடும்பத்தை நினைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள உறவுகளை நினைத்தால், தவறான எண்ணங்கள் விலகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

சாதனை மாணவர்களுக்கு டி.வி.ஆர்., வெள்ளி பதக்கம்

ஜெயித்துக் காட்டுவோம்நிகழ்ச்சியில் பங்கேற்று, முந்தைய பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.

அசோக் நகர் ஸ்டெல்லா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த எஸ்.சுஜிதா, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்.ஷிவானி, எஸ்.அனு கீர்த்தனா, ஜே.நிஜஸ்ரீ, எஸ்.ஸ்ரீனிவாசன் மற்றும் நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த எஸ்.ரமாதேவி ஆகியோர், ’தினமலர்ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவிலான ரேங்க் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us