திருப்பூர் கல்லூரி மாணவ, மாணவியரின் திறமைக்கு மதிப்பு!
திருப்பூர் கல்லூரி மாணவ, மாணவியரின் திறமைக்கு மதிப்பு!
UPDATED : மார் 24, 2016 12:00 AM
ADDED : மார் 24, 2016 11:07 AM
திருப்பூர்
: திருப்பூர் மாணவர்கள் சிறப்பாக, ஆடை டிசைன்கள்
உருவாக்குகின்றனர்; எனவே, தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும், என, ஜெர்மன் நாட்டு பையர்கள்
தெரிவித்தனர்.
திருப்பூர் பின்னலாடை துறையினர் மத்தியில், சுயமாக டிசைன் உருவாக்குவதை க்குவிக்கும்வகையில், நிப்ட்-டீ கல்லூரி பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மன் நாட்டு நிறுவனங்களிடமிருந்து வாய்ப்புகள் பெற்று, மூன்று முறை, டிசைன்களை உருவாக்கி, வழங்கியுள்ளது. நான்காவதாக, ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆஷாதி நிறுவனம், புதிய டிசைன் உருவாக்க வாய்ப்பு வழங்கியது.
மாணவ, மாணவியர் 30 பேர், மொத்தம் 113 சைன்களை உருவாக்கினர். சிறந்த டிசைன்களை தேர்வு செய்வதற்காக, ஜெர்மன் பையர்கள், ரெஜினா, எல்கே இருவரும், நேற்று, திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரிக்கு வந்தனர்.
புதிய டிசைன்கள், மாதிரி ஆடைகளை ஆய்வு செய்து, நான்கு சிறந்த டிசைன்களை, தேர்வு செய்தனர். மாணவி லவீனா எலிஸபெத் உருவாக்கிய டிசைன் முதலிடம்; லாவண்யா இரண்டாமிடம்; சிவசங்கவி மூன்றாமிடம்; பிரைமி மோல் பிரான்சிஸ் நான்காமிடம் பெற்றது. சிறந்த டிசைன்களை உருவாக்கிய மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
ஜெர்மனி பையர்கள் ரெஜினா, எல்கே கூறியதாவது:டில்லி தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகளவு உள்ளனர். இவர்களுக்கு தையல் பயிற்சி ளிக்கப்பட்டுள்ளது. அப்பெண்களுக்கு மறு வாழ்வு அளிப்பதற்காக, ஜெர்மன் நாட்டு ஆஷாதி நிறுவனம், ஆடை தயாரிப்பு பணிகளை வழங்குகிறது. ஆஷாதி-2017 கோடை கால ஆடை உற்பத்திக்கான டிசைன்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
அதில், 15 வகையான டிøŒன்கள் உருவாக்கப்பட உள்ளது. மிக சிக்கலான டிசைன்களை உருவாக்க, நிப்ட்-டீ கல்லூரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள், சிறப்பான டிசைன்களை உருவாக்கியுள்ளனர். அனைத்து டிசைன்களுமே, நேர்த்தியாக உள்ளன. இதில், நான்கு டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த டிசைன்கள், கோடை கால ஆடைகளில் இடம்பெற செய்யப்படும். இந்தியாவில் உற்பத்தியாகும் ஆடைகளுக்கு, ஜெர்மன் நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.
கடந்த காலங்களில், அதிக செலவில் ஜெர்மன் டிசைனில் நிறுவனங்களிடம், டிசைன்களை உருவாக்கி பெற்றோம். இனி, டிசைன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள், திருப்பூருக்கே வழங்கப்படும்.
ஜெர்மன் நின்பெர்க் பல்கலை, நிப்ட்-டீ கல்லூரி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும்,
மாணவர் கல்வித்திறன் மேம்படுத்தவும், முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, ரெஜினோ, எல்கே கூறினர். கல்லூரி அகாடமிக்
கமிட்டி தலைவர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் மோகன்
உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
