தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தற்காப்புக்கு கராத்தே; அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு

தற்காப்புக்கு கராத்தே; அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு

தற்காப்புக்கு கராத்தே; அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்
: மாணவியர் தங்களை தற்காத்து கொள்ளும் வகையில்
, அனைவருக்கு கல்வி இயக்கம் சார்பில், கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பெண் கல்வித் திட்டக்கூறு சார்பில், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, அவர்களை தற்காத்து கொள்ள கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில், 12 அரசு பள்ளிகளை சேர்ந்த, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 1,000 மாணவியருக்கு காரத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. 

இதில், கரூர் வட்டாரத்தில், மூன்று பள்ளிகளை சேர்ந்த, 190 மாணவியர், தாந்தோன்றிமலையில், இரண்டு பள்ளிகள், 110 மாணவியர், அரவக்குறிச்சியில், ஒரு பள்ளி, 100 மாணவியர், கிருஷ்ணராயபுரம், இரண்டு பள்ளி, 80 மாணவியர், கடவூரில், ஒரு பள்ளி, 80 மாணவியர், குளித்தலை, இரண்டு பள்ளிகள், 120 மாணவியர், தோகைமலை, இரண்டு பள்ளிகள், 80 மாணவியருக்கு பயற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து. அனைவருக்கும் இயக்கம் முதன்மை கல்வி அலுவலர் பொன்னம்மாள் கூறியதாவது: 

பள்ளி மாணவியர் அதிகளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். எதிர்த்தாக்குதல் நடத்த முடியாத மாணவியர் தான், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு முறையான தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம், தவறான நோக்கத்தில் அணுகுபவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். 

முதல் கட்டமாக, 12 பள்ளிகளில் துவங்கப்பட்டு பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பயிற்சி முடித்த பின், வேலாயுதம்பாளையம் காந்தியார் அரசு பள்ளியில், பெற்றோர் விருப்பத்தில் தொடர்ந்து பயிற்சி எடுக்கலாம். இரண்டாம் கட்ட பயிற்சி வரும், ஜூனில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us