UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 10:54 AM
புதுச்சேரி
:
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி, காரைக்கால் அணியை 170 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
சாம்பியன் பட்டம் வென்றது.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் புதுச்சேரி பிராந்தியங்களுக்கு இடையேயான 50 ஓவர் சீகெம் கோப்பை கிரிக்கெட் போட்டி கரசூர் மைதானத்தில் வார விடுமுறை நாட்களில் நடந்து வந்தது.
இறுதி போட்டியில் புதுச்சேரி அணியும், காரைக்கால் அணியும் மோதின. முதலில் களம் இறங்கிய புதுச்சேரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்களை குவித்தது.
புதுச்சேரி அணி வீரர் கார்த்திக் 106 ரன்களும், வடிவேல் 63 ரன்களும், சைஜூ 43 ரன்களும், பரசு 36 ரன்களும் எடுத்தனர். காரைக்கால் அணி வீரர் பாபு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து களம் இறங்கிய காரைக்கால அணி 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. புதுச்சேரி அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
காரைக்கால் அணி வீரர்கள் கவுரி சங்கர் 49 ரன்கள், ராஜாவிக்னேஷ் 42 ரன்கள், விக்னேஷ்வரன் 40 ரன்கள், பாபு 27 ரன்கள் எடுத்தனர். புதுச்சேரி அணி பந்து வீச்சாளர்கள் தாமரை, சரவணன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
வெற்றிப்பெற்ற அணிகளுக்கு கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி தலைவர் தாமோதரன், பல்மேரா இயக்குனர் ஜோர்கன் புச், இன்ஸ்பெக்டர் மனோகர் பரிசு வழங்கினர். இறுதி போட்டி மற்றும் தொடர் நாயகன் விருது கார்த்திக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான விருதினை காரைக்கால் அணி வீரர் விக்னேஷ்வரன், சிறந்த பந்து வீச்சாளர் விருது புதுச்சேரி அணி வீரர் தாமரைக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்
போட்டி நிர்வாகிகள் அருள்குமார், சந்துரு, நிர்வாகிகள் ராம்மோகன் சிங், சரவணன், விசுவநாதன், சண்முகம், நாராயணமூர்த்தி, ராஜூமேத்தா, மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
