தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலை மகளிர் கல்வி படிப்பு; விண்ணப்பங்கள் வரவேற்பு

முதுகலை மகளிர் கல்வி படிப்பு; விண்ணப்பங்கள் வரவேற்பு

முதுகலை மகளிர் கல்வி படிப்பு; விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : மே 14, 2016 12:00 AM

ADDED : மே 14, 2016 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2016 12:00 AM ADDED : மே 14, 2016 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் முதுகலை மகளிர் கல்வி மற்றும் தொழில் முனைதல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் முதுகலை மகளிர் கல்வி மற்றும் தொழில் முனைதல் இரண்டாண்டு படிப்பு, இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பில், வகுப்பறை கல்வி மற்றும் களப்பணியில் செயல் முறை விளக்கம், ஆராய்ச்சிப்பணி வழங்கப்படும்.

இளங்கலை படிப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவியர் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, பல்கலை மானியக் குழுவால் அனுமதிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. விண்ணப்பங்களை, பல்கலையின் பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விபரங்களுக்கு, பேராசிரியர் மினி மேத்யூ, இயக்குனர், மகளிரியல் மையம், அவினாசிலிங்கம் மகளிர் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், கோவை 43 என்ற முகவரியிலும், 0422 2433408, 2440241 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், www.avinuty.ac.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us