தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுறுசுறுப்பாகுமா? காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வு பணிகள்

சுறுசுறுப்பாகுமா? காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வு பணிகள்

சுறுசுறுப்பாகுமா? காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வு பணிகள்


UPDATED : மே 24, 2016 12:00 AM

ADDED : மே 24, 2016 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2016 12:00 AM ADDED : மே 24, 2016 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: தமிழக சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்டதால்
, பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுப் பணிகளை, மீண்டும் துரிதப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பல்கலை துணைவேந்தராக இருந்த கல்யாணி பதவிக் காலம் ஓராண்டிற்கு முன் முடிந்தது. அப்போதே புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய கவர்னர் பிரதிநிதி பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் சிண்டிகேட் பிரதிநிதி ஹரிஷ்மேத்தா, செனட் பிரதிநிதி ராமசாமி ஆகியோர் கொண்ட கன்வீனர் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. 

துணைவேந்தர் தேர்வு செய்யும் இறுதிகட்ட பணிகள் நடந்த போது, கன்வீனர் மீதான அதிருப்தியால், செனட் பிரதிநிதி ராமசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே சட்டசபை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால், நன்னடத்தை விதி அமலானது. தேர்தல் முடிந்து நன்னடத்தை விதி மே 22ல் முடிவுக்கு வந்தது.

நேற்று அ.தி.மு.க., அரசும் பொறுப்பேற்றது. இந்நிலையில் இப்பல்கலை துணைவேந்தர் தேர்வுப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கல்வியாளர் எதிர்பார்க்கின்றனர்.

சோம்பல் முறிக்குமா 
பல்கலை:
 

செனட் பிரதிநிதி ராமசாமி ராஜினாமா செய்த பின், புதிய பிரதிநிதியை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்துவதில் பல்கலை துரிதம் காட்டவில்லை. இத்தேர்தல் நடத்துவதற்கு சிண்டிகேட் ஒப்புதல் பெற்று தயார் நிலையில் பல்கலை இருந்திருக்கலாம். சிண்டிகேட் ஒப்புதல் பெறுவதற்கும் நன்னடத்தை விதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் பல்கலை அவ்வாறு முன்கூட்டியே தயார் நிலையில் இல்லை.

செனட்&' தேர்தல் நடத்துவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. செனட் தேர்தல் நடத்த தாமதம் ஏற்பட்டால், புதிய துணைவேந்தர் தேர்வும் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், செனட் தேர்வு நடத்த கவர்னர் அனுமதி வேண்டும். இந்த வாரத்தில் கவர்னருக்கு கடிதம் அனுப்பி அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும், என்றன.

தப்பியது கன்வீனர் கமிட்டி:

சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சி அமைத்திருந்தால், இப்பல்கலைக்கான கன்வீனர் கமிட்டி கலைக்கப்பட்டு புதிய கமிட்டி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க., ஆட்சியே தொடர்ந்ததால் அதே கமிட்டி தொடர வாய்ப்பு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us