தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது!

கேட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது!

கேட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது!


UPDATED : அக் 13, 2009 12:00 AM

ADDED : அக் 13, 2009 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2009 12:00 AM ADDED : அக் 13, 2009 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.எம்., உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வை 2007ம் ஆண்டில் 1.8 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.3 லட்சமாக உயர்ந்தது. கேட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஆண்டில் கேட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் முதல் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய நிலவரப்படி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2 லட்சம்தான். விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டதும் இந்த எண்ணிக்கை 2.35 லட்சமாக மட்டுமே உயர்ந்துள்ளது. விண்ணப்பத தேதி அக்டோபர் 11ம் தேதி முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில், கேட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2.76 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முதல் கேட் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதோ என்று எழுப்பப்படும் சந்தேகங்களை அகமதாபாத் ஐ.ஐ.எம்., இயக்குநர் சமீர் பருவா மறுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us