ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு படிப்புகள்: இக்னோ திட்டம்
ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு படிப்புகள்: இக்னோ திட்டம்
UPDATED : அக் 13, 2009 12:00 AM
ADDED : அக் 13, 2009 05:19 PM
அ நிறம் | அளவு
இத்திட்டப்படி, பணியிலிருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீர்கள் படித்துப் பட்டதாரிகளாக முடியும்.
ராணுவ வீரர்களுக்கு முறையான படிப்பை அளித்து, பணி ஓய்வுக்குப் பிறகும் வேறு வேலைகளுக்கு அவர்களைத் தகுதியுடையவர்களாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழக இணைத் துணைவேந்தர் லதா பிள்ளை தெரிவித்தார்.
ராணுவத்தில் சேரும் பலருக்கு போதிய படிப்புத் தகுதி இல்லாமல் உள்ளனர். அவர்கள் 40 வயதில் ஓய்வு பெறும்போது, வேறு வேலைகளைத் தேடுவது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆண்டுதோறும் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களை இலக்காகக் கொண்டு இக்னோ இந்தப் படிப்புகளைத் தொடங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அக்கவுன்டன்சி, சிக்னலிங் அண்ட் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளும் அளிக்கப்படும். பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., போன்ற படிப்புகளையும் அவர்கள் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் லதா பிள்ளை.
