அமெரிக்க வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களும், சீனர்களுமே அதிகம்
அமெரிக்க வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களும், சீனர்களுமே அதிகம்
UPDATED : ஆக 30, 2020 12:00 AM
ADDED : ஆக 30, 2020 09:28 AM
இது குறித்து, அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் படிக்க வரும் மாணவர்களுக்கு, &'எப் - 1&' மற்றும் &'எம் - 1&' விசாக்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும், சீனாவில் இருந்து, நான்கு லட்சத்து, 74 ஆயிரத்து, 497 மாணவர்களும், இந்தியாவில் இருந்து, இரண்டு லட்சத்து, 49 ஆயிரத்து, 221 மாணவர்களும், அமெரிக்காவில் படிக்க வந்துள்ளனர்.
இது, மொத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில், 48 சதவீதமாகும். இது, 2018ம் ஆண்டை விட, சற்று அதிகம். ஆனால், ஒட்டுமொத்த ஆசியாவில் இருந்து, அமெரிக்கா வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, 2018ல் இருந்ததை விட, 2019ல் சற்று குறைந்துள்ளது.
மேற்காசிய நாடுகளான, கத்தார், சிரியா, ஏமனிலிருந்து, மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே, அமெரிக்காவுக்கு படிக்க வருகின்றனர். மாறாக, அசர்பைஜான், கம்போடியா, கிர்கிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து, 2019ல், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அமெரிக்கா வந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
