தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது


UPDATED : செப் 03, 2020 12:00 AM

ADDED : செப் 03, 2020 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2020 12:00 AM ADDED : செப் 03, 2020 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
அரசுப் பணிகளில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தமிழக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் இருவரது வழக்கில், &'பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், &'இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்&' என, கோரிக்கை வைக்கப்பட்டது. 
தமிழக அரசின் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. &'அரசு பணியிடங்களில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்&' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us