தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு


UPDATED : செப் 03, 2020 12:00 AM

ADDED : செப் 03, 2020 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2020 12:00 AM ADDED : செப் 03, 2020 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கடந்தாண்டைவிட மாணவர் சேர்க்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. 80.08 சதவீதம் பேர் ஆங்கில வழிக்கல்வியை தேர்வு செய்துள்ளனர்.
மாநகராட்சியின்கீழ் 26 துவக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள், 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு தமிழ், ஆங்கில வழிக்கல்வி வசதி உள்ளது. 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயில்கின்றனர். ஆண்டுதோறும் புதிதாக 2500 வரை மாணவர்கள் சேர்கின்றனர். இம்முறை கொரோனாவால் மாநில அளவில் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளிகளிலும் கணிசமாக உயர்ந்துள்ளது. 
ஆக.,17 முதல் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆக.,31 நிலவரப்படி 4028 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம். இதுவரை 1285 மாணவர்கள், 2743 மாணவிகள் சேர்ந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 38 சதவீதம் கூடுதல். மொத்த சேர்க்கையில் 3226 பேர் ஆங்கில வழிக்கல்வியை தேர்வு செய்துள்ளனர். இது 80.08 சதவீதமாகும்.
மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், &'மாநகராட்சி பள்ளிகளில் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் உயர்கிறது. பள்ளி கட்டமைப்பிலும் தனியார் பள்ளிகளுடன் போட்டி போடுகிறது. எனவே தான் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது. கொரோனா பாதிப்பால் கட்டணம் செலுத்த முடியாமலும் பலர் அரசு பள்ளிகள் பக்கம் திரும்பியுள்ளனர்&' என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us