UPDATED : செப் 03, 2020 12:00 AM
ADDED : செப் 03, 2020 09:43 AM
சென்னை:
ஆன்லைன் வகுப்புகளை தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்தி விட்டு நடத்துங்கள் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
உளுந்துார்பேட்டையை அடுத்த மேட்டு நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த, விவசாயி ஆறுமுகத்திற்கு, ௩ மகள்கள். நித்தியஸ்ரீ, கல்லுாரியில் படிக்கிறார். மற்ற இருவரும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். மூன்று போன்கள் வாங்கித் தரும் வசதி இல்லாததால், மூவருக்கும் சேர்த்து, ஒரே ஒரு மொபைல் போன் வாங்கித் தந்துள்ளார்.
ஒரே நேரத்தில், மூவருக்கும் வகுப்புகள் வந்தால், யார் பயன்படுத்துவது? இதனால் ஏற்பட்ட விரக்தியில், ஆறுமுகத்தின் மூத்த மகள் நித்தியஸ்ரீ, தற்கொலை செய்ததை, சாதாரண மரணங்களில் ஒன்றாக கடந்து விட முடியாது. அனைவருக்குமானது, &'ஆன்லைன்&' வகுப்புகள் என்பதை, நித்தியஸ்ரீயின் மரணம் எடுத்துக் காட்டுகிறது. எனவே, பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக, ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்தி விட்டு, நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
