தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை தேர்வுத்துறையில் முறைகேடு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பரிந்துரை

பல்கலை தேர்வுத்துறையில் முறைகேடு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பரிந்துரை

பல்கலை தேர்வுத்துறையில் முறைகேடு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பரிந்துரை


UPDATED : செப் 06, 2020 12:00 AM

ADDED : செப் 06, 2020 07:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2020 12:00 AM ADDED : செப் 06, 2020 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி - டி.டி.இ.,- விடைத்தாள் மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது.
மதுரை பல்கலை, டி.டி.இ.,யில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் அளித்தது, மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்தது, போலி மதிப்பெண் சான்று அச்சடிப்பு, வெளிமாநில மையங்களில் தேர்வர்களை வீடுகளில் எழுத வைத்து அந்த விடைத்தாள்களை பல்கலை திருத்தும் முகாமில் சேர்த்தது உட்பட, பல முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாயின.
இதை விசாரிக்க, சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில், தீனதயாளன், ஷகிலா, பாரிபரமேஸ்வரன், மேஷாக் பொன்ராஜ் கொண்ட குழுவை, துணைவேந்தர் கிருஷ்ணன் அமைத்தார். தேர்வாணையர் ரவி, கூடுதல் தேர்வாணையராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவரிடமும், முதல்வர் முதல் தற்காலிக பணியாளர்கள் வரை, 30க்கும் மேற்பட்டோரிடமும், குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
குழு எடுத்த முடிவுகள் விவரம்:

விசாரணையில் ஒட்டுமொத்த முறைகேடுகளும் தேர்வாணையர் மற்றும் கூடுதல் தேர்வாணையர் அலுவலகங்களில் நடந்ததுள்ளது தெரிந்தது. விசாரணையின் போது பெரும்பாலான ஆவணங்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி, குழப்பும் வகையில் பதில் அளித்தனர். 
இதனால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே உண்மை நிலவரம் அறிய, விடைத்தாள்கள் உள்வைத்தல், போலி மதிப்பெண் பட்டியல் அச்சடிப்பு, மதிப்பெண் திருத்திய முறைகேடுகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது.
பணி நீக்கம்

டி.டி.இ.,யில் பணியாற்றும் தற்காலிக பணியாளர் விவேக் கூறியதாக, மறுமதிப்பீட்டில் குறிப்பிட்ட தேர்வர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கிய கவுரவ விரிவுரையாளர் முருகேஸ்வரி மற்றும் விவேக்கை பணி நீக்கம் செய்ய குழு பரிந்துரைத்தது.
விடைத்தாள்கள் செருகல் முறைகேட்டில், துணைப் பதிவாளர் செல்வம், உதவி பதிவாளர் சுப்பிரமணி, தற்காலிக பணியாளர்கள் பெருமாள், செல்வக்குமார், சுந்தரேசன், தாமரைக்கண்ணன், ரமேஷ், ரமேஷ்பாபு ஆகிய, எட்டு பேரும் ஈடுபட்டது கண்டறியப்பட்டு உள்ளது.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
பருவத் தேர்வு ரத்து

பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், 2019 நவ.,ல் நடந்த பருவமுறை தேர்வுகளில், &'காப்பி&' அடித்தது உட்பட விதிமீறல்களில் மாணவர்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தவறை ஒத்துக்கொண்டனர்.இதையடுத்து அந்த செமஸ்டரில் அவர்கள் எழுதிய அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
&'மெகா&' முறைகேடு

வெளி மாநில டி.டி.இ., மையங்களில், தேர்வர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதியது, அதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 56 ஆண்டு பல்கலை வரலாற்றில், நேர்மையை சோதிக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்த, &'மெகா&' முறைகேட்டை விசாரிக்கவும், சி.பி.சி.ஐ.டி.,விசாரணை தேவை என குழு பரிந்துரைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us