கல்விச் சேவையில் தினமலர் என்.எல்.சி., அதிகாரி பாராட்டு
கல்விச் சேவையில் தினமலர் என்.எல்.சி., அதிகாரி பாராட்டு
UPDATED : அக் 27, 2009 12:00 AM
ADDED : அக் 27, 2009 12:50 PM
தினமலரின் கல்விச் சேவையை பாராட்டாவிட்டால் நாம் நன்றி மறந்தவர்களாகி விடுவோம் என, என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் செந்தமிழ்ச்செல்வன் பேசினார். தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நெய்வேலி லிக்னைட் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியில் முதன்மை விருந் தினராக பங்கேற்ற என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் செந்தமிழ்ச்செல்வன் பேசியதாவது: நாட்டில் பல செய்திகள் உருவாகும். ஆனால், அதில் நல்ல செய்திகளை மட்டும் தேர்வு செய்து மக்களுக்கு வழங்கி வரும் தினமலரின் சேவை மட்டுமின்றி, கல்விச் சேவையும் மிகவும் பாராட்டுக்குரியது.
தினமலரின் கல்விச் சேவையை பாராட்டாவிட்டால் நாம் நன்றி மறந்தவர்களாகி விடுவோம். தினமலர் வாரமலரில் வெளியாகும் அந்துமணியின் பா.கே.ப., பகுதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உதாரணத்திற்கு மக்களின் நேர்மையை கண்டறிவதற்காக உலகம் முழுவதும் நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியர்கள் முதன்மையானவர்களாக திகழ்கின்றனர் என்ற செய்தி பா.கே.ப.,வில் படித்த போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.
சிறுவர்மலர் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் பயனளிப்பதாக உள்ளது. கீழ்த்தரமான செய்திகளை புறக்கணித்து நாட்டிற்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பல வகையில் உதவி வரும் தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம் போன்ற கல்வி நிகழ்ச்சிகளை, மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டால் அவர்களது வாழ்க்கையின் அடித்தளம் வலுவாக இருக்கும். இவ்வாறு செந்தமிழ்ச்செல்வன் பேசினார்.
