UPDATED : அக் 27, 2009 12:00 AM
ADDED : அக் 27, 2009 03:25 PM
அ நிறம் | அளவு
எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. சுகாதாரத் துறை முதன்மை செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேனின் பதவிக் காலம் வரும் நவம்பர் 27ம் தேதியுடன் முடிகிறது.
புதிய துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் கொண்ட பட்டியலை பரிந்துரைக்க, தேர்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. அக்குழுவில், எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கண்ணன், ஓய்வு பெற்ற மருத்துவப் பேராசிரியர்கள் ராஜன், சேஷய்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
