தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜே.இ.இ., தேர்வு முடிவு; மஹாராஷ்டிரா மாணவர் முதலிடம்

ஜே.இ.இ., தேர்வு முடிவு; மஹாராஷ்டிரா மாணவர் முதலிடம்

ஜே.இ.இ., தேர்வு முடிவு; மஹாராஷ்டிரா மாணவர் முதலிடம்


UPDATED : அக் 07, 2020 12:00 AM

ADDED : அக் 07, 2020 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2020 12:00 AM ADDED : அக் 07, 2020 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி;
&'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு&' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மஹாராஷ்டிராவின், புனே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர், சிராக் பாலர் முதலிடம் பிடித்தார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான, ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வு, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், செப்டம்பரில் நடந்தது. அதில் தேர்ச்சி பெற்ற, 2.5 லட்சம் பேரில், 1.6 லட்சம் மாணவர்கள் மட்டுமே, ஜே.இ.இ., &'அட்வான்ஸ்டு&' தேர்வுக்காக விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வு, செப்டம்பர், 27ல் நடந்தது. அந்த தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. 
இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில், 6,707 பேர் மாணவியர். மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த சிராக் பாலர் என்ற மாணவர், இந்த தேர்வில் முதலிடம் பிடித்தார். 396 மதிப்பெண்களுக்கு நடந்த இந்த தேர்வில், 352 மதிப்பெண்களை, சிராக் பெற்றார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மாணவர் புவன் ரெட்டியும், பீஹாரை சேர்ந்த மாணவர் வைபவ் ராஜும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.
315 மதிப்பெண்களுடன், 17வது இடத்தை பிடித்த மாணவி கனிஷ்கா மிட்டில், பெண்களில் முதலிடம் பிடித்தார். 
மத்திய அரசுக்கு &'நோட்டீஸ்&'


ஜே.இ.இ., தேர்வு எழுதச் சென்ற தன் மகனிடம், புகைப்படம் வேண்டும் என, தேர்வு மைய அதிகாரிகள் கேட்டு அலைய வைத்து துன்புறுத்தியதாக கூறி, அந்த மாணவரின் தந்தை, டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். தன் மகனுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயந்த் நாத், இது குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய கல்வித் துறை அமைச்சகத்திற்கு, &'நோட்டீஸ்&' அனுப்ப உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us