UPDATED : அக் 10, 2020 12:00 AM
ADDED : அக் 10, 2020 12:46 PM
சென்னை:
மாவட்ட கல்வி அதிகாரியான டி.இ.ஓ. பதவி உயர்வுக்கு 95 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது வழக்குகள் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதா என பட்டியல் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையில் ஒவ்வொரு ஆண்டும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக மாவட்ட கல்வி அதிகாரியான டி.இ.ஓ. பதவி உயர்வு வழங்க தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 50 பேர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 45 பேர் இடம் பெற்றுள்ளனர்.இவர்களின் கல்வி தகுதி முகவரி பணிபுரியும் இடம் பணியிடத்தில் செயல்பாடுகள் நன்னடத்தை ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் வழக்கு உள்ளிட்ட 30 வகை விபரங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரிக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
