தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ., ரேங்க் பட்டியல் நாளை முதல் கவுன்சிலிங்

எம்.பி.ஏ., ரேங்க் பட்டியல் நாளை முதல் கவுன்சிலிங்

எம்.பி.ஏ., ரேங்க் பட்டியல் நாளை முதல் கவுன்சிலிங்


UPDATED : நவ 04, 2020 12:00 AM

ADDED : நவ 04, 2020 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2020 12:00 AM ADDED : நவ 04, 2020 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கான, &'ரேங்க்&' பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது; நாளை முதல் &'ஆன்லைன்&' கவுன்சிலிங் துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலை, இன்ஜி., கல்லுாரிகள், கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, ஆண்டுதோறும், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், நேரடி கவுன்சிலிங் நடத்தப்படும்.நடப்பாண்டு, கொரோனா காரணமாக, ஆன்லைன் வாயிலாக, கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆக., 30ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.
தொடர்ந்து சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கட்டணம் வசூலிக்கப்பட்டு, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் நாளை நவ., 5ம் தேதி துவங்க உள்ளது. தொடர்ந்து, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கான பொது கவுன்சிலிங் வரும், 19ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
மொத்தமுள்ள, 4,962 எம்.சி.ஏ., இடங்களுக்கு, 1,671 தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 996 எம்.பி.ஏ., இடங்களுக்கு, 5,384 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us