பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவேசம்
பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவேசம்
UPDATED : நவ 05, 2009 12:00 AM
ADDED : நவ 05, 2009 11:59 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சிலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள கிராமங்களிலுள்ள துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுசுவர் சரிவர அமைக்கப்படாமல் உள்ளது.
சுற்றுசுவரை தாண்டி குடிமகன்கள் பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் அதிகரித்து வருகிறது. காலை நேரங்களில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அதை சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். இதனால், மாணவர்களின் ஒழுக்கம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் சார்பில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை டி.எஸ்.பி.,க்களிடம் புகார் அளித்து, பள்ளிகளுக்கு முன் எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்த வேண்டும்.கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மூலமும் போலீசிடம் புகார் அளித்து, பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்க திட்டமிடப்பட்டள்ளது.இவ்வாறு, கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒன்றியம் சார்பிலும், கல்வித்துறை சார்பிலும் போலீசிடம் தகுந்த முறையில் புகார் அளிக்கப்படும். போலீசாரின் அனுமதியின் பேரில், எஸ்.எஸ்.ஏ., சார்பில் பள்ளிகளுக்கு முன் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி சுற்றுசுவரை சுற்றிலும் கம்பி வேலி கொண்டு தடுப்பு அமைக்கப்படும்.
இதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.பள்ளிகளுக்கு அத்துமீறி நுழையும் நபர்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
