தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்கம்

எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்கம்

எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்கம்


UPDATED : ஜன 21, 2021 12:00 AM

ADDED : ஜன 21, 2021 06:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2021 12:00 AM ADDED : ஜன 21, 2021 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்ந்துள்ள, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புநடந்தது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஏற்கனவே முடிந்து விட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில், 446 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தாலும், கொரோனா தொற்று காலம் என்பதால், முதலாமாண்டுக்கு வகுப்புகள் துவங்க வில்லை. இதனால், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு அறிமுக வகுப்பு, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நேற்று துவங்கியது.மாணவர்கள், பெற்றோரு டன் கல்லுாரிகளுக்கு வந்திருந்தனர். கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்கு, கல்லுாரிகளில் சோதனை செய்யப்பட்டது.
ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில், அனைத்து ஆவணங்களும் முறையாக சரிபார்க்கப்பட்டு, பெருவிரல் ரேகை, விழித்திரை பதிவு செய்யப்பட்ட பின், மாணவர்கள் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாணவ - மாணவியர் உடை அணியும் விதம், வகுப்பறை கட்டுப்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது.சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர், மருத்துவருக்கான உடை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர். அனைத்து கல்லுாரிகளிலும், முறையான முதலாம் ஆண்டு வகுப்பு, பிப்., 2 முதல் துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us