தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தாகூர் கல்லூரி முதல்வர் கவன ஈர்ப்பு போராட்டம்

தாகூர் கல்லூரி முதல்வர் கவன ஈர்ப்பு போராட்டம்

தாகூர் கல்லூரி முதல்வர் கவன ஈர்ப்பு போராட்டம்


UPDATED : ஜன 21, 2021 12:00 AM

ADDED : ஜன 21, 2021 06:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2021 12:00 AM ADDED : ஜன 21, 2021 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சசிகாந்ததாஸ், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கல்லுாரி முன்பு அமர்ந்து, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக பேராசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கல்லுாரியில் கடந்த 3 ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகுப்பறை, கழிவறை, கம்ப்யூட்டர் லேப் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும், மாணவர்களின் மன நலம் காக்க அனைத்து கல்லுாரிகளிலும் மனநல ஆலோசகர்கள் நியமிக்க வேண்டும். கல்லுாரி பராமரிப்பு பணி தொகையை உயர்த்த வேண்டும், பேராசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழுவின் 2018ம் ஆண்டு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 
காலியாக உள்ள அரசு கல்லுாரி முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us