தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மார்ச் 20, 21ல் டான்செட் நுழைவு தேர்வு

மார்ச் 20, 21ல் டான்செட் நுழைவு தேர்வு

மார்ச் 20, 21ல் டான்செட் நுழைவு தேர்வு


UPDATED : ஜன 21, 2021 12:00 AM

ADDED : ஜன 21, 2021 06:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2021 12:00 AM ADDED : ஜன 21, 2021 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முதுநிலை படிப்புக்கான, &'டான்செட்&' நுழைவு தேர்வு, மார்ச், 20, 21ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்றவற்றில் மாணவர்களை சேர்க்க, டான் செட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 
தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையால், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, டான்செட் நுழைவு தேர்வு தேதிகளை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இதன்படி, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற வற்றுக்கு, மார்ச், 21ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,வுக்கு, மார்ச், 20ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. பிப்., 12 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 
கூடுதல் விபரங்களை, https://tancet.annauniv.edu/tancet/ index.html என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us