தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழில் பொறியியல் படிப்பு; தமிழக பா.ஜ., வரவேற்பு

தமிழில் பொறியியல் படிப்பு; தமிழக பா.ஜ., வரவேற்பு

தமிழில் பொறியியல் படிப்பு; தமிழக பா.ஜ., வரவேற்பு


UPDATED : மே 31, 2021 12:00 AM

ADDED : மே 31, 2021 09:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2021 12:00 AM ADDED : மே 31, 2021 09:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'தொழில்நுட்ப கல்வியை தாய்மொழியில் கற்கிறபோது, தமிழை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், அதன் நுட்பத்தை நன்கு அறிந்து, தெரிந்து படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும்&' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பொறியியல் இளநிலை படிப்புகளை தமிழில் கற்கவும், தமிழிலேயே தேர்வு எழுதவும், அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது. தொழில்நுட்ப கல்வியை, தாய்மொழியில் கற்கிற பொழுது, தமிழை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், அதன் நுட்பத்தை நன்கு அறிந்து, தெரிந்து படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும்.
கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்கள், இனி பொறியியல் படிப்புகளில் தயக்கமின்றி சேர முன்வருவர். ஆங்கிலம் முழுமையாக தெரியாத காரணத்தால், பொறியியல் படிப்புகளில் இணைய முன்வராத மாணவர்களுக்கு, இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியானது.
பல பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பால், மாணவர் சேர்க்கையும் அதிகமாகும். ஏற்கனவே, ஆரம்ப பள்ளி படிப்புகளில் தாய்மொழி கல்வியை, தேசிய கல்வி கொள்கை வழங்கியுள்ளதில், மகிழ்ச்சி அடைந்தோம். இப்போது, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல, பொறியியல் இளநிலை படிப்புகளை, தமிழில் கற்கும் வாய்ப்பை அறிவித்துள்ளது, மிகவும் மகிழ்ந்து வரவேற்கத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us