தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு கட்டணம் செலுத்த இன்ஜி., கல்லுாரிகளுக்கு கெடு

தேர்வு கட்டணம் செலுத்த இன்ஜி., கல்லுாரிகளுக்கு கெடு

தேர்வு கட்டணம் செலுத்த இன்ஜி., கல்லுாரிகளுக்கு கெடு


UPDATED : மே 31, 2021 12:00 AM

ADDED : மே 31, 2021 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2021 12:00 AM ADDED : மே 31, 2021 09:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இன்ஜினியரிங் மாணவர்களுக்கான ஏப்ரல், மே செமஸ்டர் தேர்வுகளுக்கு, வரும் 12ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என, பொறியியல் கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பிப்., மற்றும் மார்ச் மாத செமஸ்டர் தேர்வு, அரசின் உத்தரவுப்படி மறு தேர்வாக நடத்தப்படுகிறது. இதற்கு மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணம் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஏப்ரல், மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு அறிவிப்பையும், அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. 
அதன்படி, ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களின் விபரங்களை வரும் 7ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு, கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், மாணவர்களிடம் இந்த தேர்வுக்கான கட்டணத்தை வசூலித்து, வரும் 12ம் தேதிக்குள் தேர்வுத் துறையில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us