தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொள்ளையடிக்க முடியாதது கல்வி: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

கொள்ளையடிக்க முடியாதது கல்வி: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

கொள்ளையடிக்க முடியாதது கல்வி: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு


UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM

ADDED : ஜூன் 29, 2021 01:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM ADDED : ஜூன் 29, 2021 01:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
யாராலும் கொள்ளையடிக்க முடியாத ஒரே சொத்து கல்வி மட்டும் தான் என சிவகங்கையில் கல்வித்துறை சார்பில் நடந்த ஆடிட்டோரியம் திறப்பு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், ரூ.99 லட்சம் மதிப்பில் கல்வித்துறை சார்பில் ஆடிட்டோரியம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: ஒரு குடும்பத்திற்கு கல்வி கிடைத்தால் தான், கிராமம், நாடே வளர்ச்சி பெறும். இதன் மூலம் நாடே பொருளாதார வளர்ச்சியை எட்டும். யாராலும் கொள்ளையடிக்க முடியாத ஒரே சொத்து கல்வி மட்டும் தான், என்றார்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி செப்., ல் தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி நிர்வாகத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த திட்டமா என கேட்டதற்கு, பதில் கூற மறுத்து விட்டார். மாவட்ட கல்வி அலுவலர் அமுதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us