இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்குப்பின் சேர்க்கை; யு.ஜி.சி., பதிலளிக்க உத்தரவு
இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்குப்பின் சேர்க்கை; யு.ஜி.சி., பதிலளிக்க உத்தரவு
UPDATED : ஜூன் 30, 2021 12:00 AM
ADDED : ஜூன் 30, 2021 09:46 PM
சட்ட விரோதம்
திருச்செந்துாரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:
முன்னணி கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இடம் கிடைக்க வேண்டும் என்றால், பிளஸ் 2 படிப்பில் எடுக்கும் மதிப்பெண் முக்கியமானது. அதிக மதிப்பெண் பெற்றால் தான், தரம் வாய்ந்த முன்னணி கல்லுாரிகளில் இடம் கிடைக்கும்.எனவே, பிளஸ் 2 தேர்வு நடத்தாமல், தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது சட்ட விரோதம்.
மாணவர்களின் திறன், கடின உழைப்பை முடிவு செய்வது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தான். முந்தைய தேர்வுகளின் அடிப்படையில், மதிப்பெண் வழங்குவது நியாயமற்றது. தேர்வு ரத்து என முடிவு செய்த பின், மதிப்பெண் வழங்குவதற்கு வழி அறிய, குழுவை அரசு நியமித்துள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வு ரத்து அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் புத்தாக்க வகுப்புகளை நடத்தி, இறுதி தேர்வும் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், &'சி.பி.எஸ்.இ., தேர்வு ரத்து விஷயத்தில், மதிப்பெண் வழங்கும் நடைமுறை குறித்தும், அதை ஏற்காத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை தள்ளிவைப்பு
&'கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வு முடிந்த பின், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை துவங்க, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு அனுமதிக்க வேண்டும்&' என்றார்.
இதையடுத்து, மாணவர்களின் வாழ்க்கை, கல்வி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், பல்கலை மானிய குழு பதில் அளிக்கவும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்யவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.
