கேமரா மொழி கற்கும் ஆசிரியர்கள்: காலத்திற்கேற்ப மாறியாகணும்
கேமரா மொழி கற்கும் ஆசிரியர்கள்: காலத்திற்கேற்ப மாறியாகணும்
UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM
ADDED : ஜூலை 02, 2021 06:00 PM
காலத்திற்கேற்ப, மாறுதல் மற்றும் மேம்படுதல் என்ற, முக்கிய பொறுப்பு, வருங்கால சமூகத்திற்கு அடித்தளமிடும் ஆசிரியர்களுக்கு உண்டு. கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்ற ஆசிரியர் மட்டுமே கம்ப்யூட்டரை கையாண்ட காலம் போய், இன்று அனைத்து பாட ஆசிரியர்களும், கம்ப்யூட்டர், இன்டர்நெட், சமூக வலைதளம், என டிஜிட்டல் தொழில் நுட்பங்களில் சிறந்து விளங்குகின்றனர்.
இருப்பினும், கரும்பலகையின்றி, மாணவர்களுடன் உரையாடல் இன்றி, வெறுமனே பாடத்தின் உட்கருத்தை மட்டும், &'திணித்து&'விட்டு, போகும், &'இ-வகுப்பறை&' கலாச்சாரம் &'நம்ம ஊர்&'ஆசிரியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் புதுசு.
இதற்கிடையிலும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் (டயட்) வகுப்பு வாரியாக, பாடவாரியான வீடியோக்களை தயாரித்து வருகிறது.முப்பது மாணவர்களுக்கு முன்னால் பாடம் நடத்துவதற்கும், கேமரா முன் பாடம் நடத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை, தங்கள் அனுபவங்களை பகிர்கின்றனர் திருப்பூரை சேர்ந்த ஆசிரியர்கள்.
எப்படி தேர்வுசெய்கிறார்கள்?
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடம் சார்ந்த ஆழமான, நுட்பான புரிதல் உடைய, டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை வீடியோ ஒளிப்பதிவிற்கு, தேர்வு செய்கிறோம். பெரும்பாலானோர், 10 ஆண்டுக்கு மேலான அனுபவம் உண்டு. ஆசிரியர்கள் எப்படி நடத்தினால் புரியும் என்பதை உணர்ந்து, மாணவர்களை மனதளவில் முன்னிறுத்தி பாடம் நடத்த வேண்டும்.
கேமரா பயம் பலருக்கும் இருக்கும். அதையும் மீறி ஆசிரியர்கள் திறமையுடன் பங்காற்றியுள்ளனர். கொரோனா காலத்திலும் தமிழகத்தில் கல்வி சூழல் முழுமையாக பாதிக்காதவாறு ஓரளவு தாங்கிப்பிடித்ததில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த வீடியோ பாடங்களுக்கும் முக்கிய இடம் உண்டு!
- விமலா, துணை முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம்.
