தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல் மருத்துவ கவுன்சிலிங் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பல் மருத்துவ கவுன்சிலிங் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பல் மருத்துவ கவுன்சிலிங் மத்திய அரசுக்கு நோட்டீஸ்


UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM

ADDED : ஜூலை 03, 2021 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM ADDED : ஜூலை 03, 2021 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
முதுநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் எப்போது நடத்தப் படும் என்பது குறித்து பதில் அளிக்கும்படி மத்தியஅரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளநிலை பல் மருத்துவ மாணவர்கள் ஒன்பது பேர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: 

கடந்த 2020 டிச., 16ல் நீட் - எம்.டி.எஸ்., எனப்படும் முதுநிலை பல் மருத்துவ மாணவர்களுக்கான நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 6,500 இடங்களுக்கு, 30 ஆயிரத்திற்கும் அதிகமான இளநிலை பல் மருத்துவர்கள் பங்கேற்றனர். டிச., 31ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் ஏழு மாதங்கள் ஆகியும், பல் மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. எப்போது நடத்தப்படும் என்ற விபரமும் தெரியவில்லை. அதனால், மூன்று வாரங்களுக்குள் கவுன்சிலிங் தேதியை அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை யிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது முதுநிலை பல் மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலிங் குழுவுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்ப அமர்வு உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us