தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலை துார சட்ட படிப்பை யு.ஜி.சி., அங்கீகரிக்கவில்லை

தொலை துார சட்ட படிப்பை யு.ஜி.சி., அங்கீகரிக்கவில்லை

தொலை துார சட்ட படிப்பை யு.ஜி.சி., அங்கீகரிக்கவில்லை


UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM

ADDED : ஜூலை 11, 2021 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM ADDED : ஜூலை 11, 2021 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொலைதுார கல்வி வாயிலாக சட்டப்படிப்புகளை நடத்துவதாகவும், அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றும், அண்ணாமலை பல்கலை அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். 
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டப் படிப்புகளை நடத்த இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, &'&'இவ்வழக்கில் யு.ஜி.சி., பதில் மனு தாக்கல் செய்யவில்லை,&'&' என்றார். யு.ஜி.சி., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபுமனோகர், &'&'பதில் மனு தயாராகி விட்டது; அடுத்த வாரத்தில் தாக்கல் செய்கிறோம். மேலும், அண்ணாமலை பல்கலை அறிவித்த சட்டப் படிப்புகளை, யு.ஜி.சி., அங்கீகரிக்கவில்லை,&'&' என்றார்.
பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், &'சட்டக்கல்விக்கு பார் கவுன்சில் அனுமதி பெற வேண்டும். அதன் அனுமதியின்றி நடத்த முடியாது&' என்றார். மேலும், தொலைதுார கல்வியில் சட்டப் படிப்பு நடத்த, அண்ணாமலை பல்கலைக்கு உரிமையில்லை என்றும் கூறினார். 
இதையடுத்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. அதற்குள், யு.ஜி.சி., பதில் மனு தாக்கல் செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us