தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு

இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு

இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு


UPDATED : நவ 17, 2009 12:00 AM

ADDED : நவ 17, 2009 01:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2009 12:00 AM ADDED : நவ 17, 2009 01:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நாகர்கோவில், அடையாளம்பட்டு, இருங்காட்டுகோட்டை, கோயம்பேடு, தர்மபுரி ஆகிய இடங்களில் இயங்கி வரும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் அறங்காவலர்கள் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் மீது, மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ., ஐந்து வழக்குகளை பதிவு செய் துள்ளது. இக்கல்லூரிகள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல் லாமல் செயல் பட்டு வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

நேரடி சோதனையின் போது கட்டடம், நூலகம், ஆய்வு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் முறைகேடுகள் மற்றும் விதிமுறைகள் மீறல் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்ற நிபுணர் குழுவின் பரிந்துரையை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us