தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘‘கேட்’ தேர்வு அடுத்த ஆண்டும் ஆன்லைனில் நடைபெறும்’

‘‘கேட்’ தேர்வு அடுத்த ஆண்டும் ஆன்லைனில் நடைபெறும்’

‘‘கேட்’ தேர்வு அடுத்த ஆண்டும் ஆன்லைனில் நடைபெறும்’


UPDATED : டிச 02, 2009 12:00 AM

ADDED : டிச 02, 2009 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2009 12:00 AM ADDED : டிச 02, 2009 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற ‘கேட்’ தகுதி தேர்வு மதிப்பெண் அவசியம். முதல்முறையாக இந்தாண்டு தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. பத்து நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ள இத்தேர்வு நடந்த நான்கு நாட்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதனால், ஆன்-லைனில் நடத்தப்படுவதற்கு சில தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டும் ‘கேட்’ தேர்வு ஆன்-லைனிலேயே நடத்தப்படும். அதற்குள் தொழில்நுட்ப கோளாறு முற்றிலுமாக சரிசெய்யப்படும் என்று ஐ.ஐ.எம். லக்னோ பேராசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கை குழு தலைவர் ஹிமான்சு ராய் தெரிவித்தார்.


தற்போதைய குளறுபடிக்கு மிகவும் வருந்துகிறோம். இதன் மூலம் பாடம் கற்றுள்ளோம். கேட் தேர்வு ஆன்-லைனில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதால், நாம் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம். இந்த பிரச்னை மீண்டும் எழாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us