தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செய்தி தாள்களை படித்தால் சாதனை மாணவன் ஆகலாம்

செய்தி தாள்களை படித்தால் சாதனை மாணவன் ஆகலாம்

செய்தி தாள்களை படித்தால் சாதனை மாணவன் ஆகலாம்


UPDATED : டிச 10, 2009 12:00 AM

ADDED : டிச 10, 2009 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2009 12:00 AM ADDED : டிச 10, 2009 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ""சாதனை மாணவன் ஆக விரும்பும் மாணவன், தினமும் செய்தி தாள்களை படிக்க வேண்டும்,&'&' என்று மனோதத்துவ நிபுணர் முகைதீன் கூறினார்.


அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பள்ளியில் என்ன படிக்கின்றனர் என்பதை கூட கண்டு கொள்வதற்கான  படிப்பறிவு கூட இல்லாதவர்கள். பள்ளியில் கற்பிக்கும் பாடங்களை வீட்டில் சென்று படிப்பதற்கேற்ற சூழல் இல்லாததால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சி கேள்விக்குறியதாகி வருகிறது. ஏழை மாணவர்களை பாதிக்கும் இந்த முக்கிய விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை இன்னும் கவனம் செலுத்தாமல் உள்ளது.


கோவை கணபதி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் இது போன்ற ஏழை மாணவர்களுக்கு, சித்தாபுதூர் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குடும்பச் சூழல் பற்றி உணர்த்தும் இலவச பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


டிச. 10ம் தேதி நடந்த பயிற்சி வகுப்பில், மனோதத்துவ நிபுணர் முகைதீன் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முகைதீன் பேசியதாவது:
படிக்கும் மாணவர்கள் மனதை நிர்வகிப்பது முக்கியம். படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பதற்கும், படித்த பாடங்கள் மறந்து போவதற்கும் மனதுதான் காரணம். மனதில் பிரச்னை இருந்தால் எவ்வளவுதான் நன்கு படித்தாலும் அதிக மதிப்பெண் பெறுவது சிரமம். சில மாணவர்கள் வகுப்பில் இருந்தாலும் மனதில் சினிமா பாட்டு கேட்கும். சிலர் மனதில் சினிமா படமே ஓடும். மனதில் இது போன்ற தாறுமாறான குழப்பங்கள் இருந்தால் படிப்பு ஏறுவது சிரமம்.


தொழிலாளி ஆக விரும்பும் மாணவன் சாதாரண மனிதன். முதலாளி ஆக விரும்பும் மனிதன்தான் சாதனை மனிதன். சாதனை மாணவனாக மாற, படிக்கும் காலத்தில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தினமும் செய்தித் தாள்கள் படிக்க வேண்டும். செய்தி தாள்களில் புகழ் பெற்றவர்களின் படங்கள், செய்திகள் வெளியாகும். தினமும் அதை படிக்கும் மாணவர்களுக்கு, தாங்களும் அதில் இடம் பெற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களை அறியாமலே மனதில் உருவாகும். மனதில் எது அதிகமாக இருக்கிறதோ, அதுதான் நடக்கும்.


ஏழ்மை நிலையில் உள்ள தங்கள் குடும்பம் வசதியான குடும்பமாக மாறுவது மாணவர்களின் கைகளில்தான் உள்ளது. பெற்றோரை அழைத்து வந்து பாடம் கற்பிக்க முடியாது. படிப்பு நம்மை தேடி வராது; நாம்தான் தேடி போக வேண்டும். படிக்கும் காலத்தில் தேவையில்லாத பிற விஷயங்களை ஒதுக்கி வைத்து விட்டு, படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண் பெறலாம்; வாழ்வில் உயரலாம். இவ்வாறு, மனோதத்துவ நிபுணர் முகைதீன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us