தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி மாவட்டங்களை பிரித்து பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

கல்வி மாவட்டங்களை பிரித்து பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

கல்வி மாவட்டங்களை பிரித்து பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


UPDATED : டிச 14, 2009 12:00 AM

ADDED : டிச 14, 2009 04:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2009 12:00 AM ADDED : டிச 14, 2009 04:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி : ‘கோவை கல்வி மாவட்டத்தையும், திருப்பூர் உதவி துவக்க கல்வி அலுவலகத்தையும் இரண்டாக பிரித்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார்.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
பள்ளி கல்வி துறையில் கருணை அடிப்படையில் நியமனம் செய்து, பணிவரன்முறை செய்யப்படாமல் ஊதிய உயர்வு இல்லாமலும், பதவி உயர்வு கிடைக்காமலும் குறைந்த ஊதியத்திற்கு பணி செய்து வருகின்றனர். வறுமையில் தவிக்கும் இதுபோன்ற ஊழியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும்.


அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். பள்ளி கல்வித்துறையிலுள்ள அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் அனைத்து வித ஆசிரியர் பணியிடங்களும் வழங்க வேண்டும். பள்ளி கல்வித்துறை, துவக்க கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வி துறை சார்ந்த துறைகளில் பணியாற்றும் கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் அனைவரைக்கும் மாறுதல் ஆறுதல் வழங்குவதை பள்ளி கல்வி இணை இயக்குனர் கீழ் கொண்டு வர வேண்டும்.


இத்துறையை சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சி அளிக்க வேண்டும். திருப்பூர் உதவி துவக்க கல்வி அலுவலகத்தில், 1,300 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். கோவை கல்வி மாவட்டத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டும். இத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இரவு காவலர்களை அலுவலக உதவியாளர்களாக பணி மாறுதல் செய்ய வேண்டும். அனைத்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்திற்கும், கண்காணிப்பாளர் மற்றும் கூடுதலாக இரண்டு உதவியாளர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us