தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்றுனர் விண்ணப்பம் பெற காலம் நீட்டிப்பு

ஆசிரியர் பயிற்றுனர் விண்ணப்பம் பெற காலம் நீட்டிப்பு

ஆசிரியர் பயிற்றுனர் விண்ணப்பம் பெற காலம் நீட்டிப்பு


UPDATED : டிச 14, 2009 12:00 AM

ADDED : டிச 14, 2009 07:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2009 12:00 AM ADDED : டிச 14, 2009 07:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் வட்டார வளமையங்களில் காலியாக உள்ள 563 ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளன. தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலு<வலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. டிச. 14க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.


விண்ணப்ப படிவம் விற்பனை துவங்கிய சில நாட்களிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகிவிட்டதால் படிவத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டது. பல மாவட்டங்களில் முன்பதிவு டோக்கன் கொடுத்து விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.


தற்போது விண்ணப்ப படிவம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்கவும் டிச. 18 வரை கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us