தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச யோகா தினம்: முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்பு

சர்வதேச யோகா தினம்: முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்பு

சர்வதேச யோகா தினம்: முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்பு


UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM

ADDED : ஜூன் 21, 2023 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM ADDED : ஜூன் 21, 2023 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 9வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் பங்கேற்று யோகா செய்தனர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புனேவில் உள்ள சாவித்ரிபாய் பல்கலையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். மும்பையில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார். டில்லியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அசாம் மாநிலம் துப்ரி பகுதியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்கேற்றார். ஒடிசாவின் பாலசோரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹமிர்பூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார். உத்தரகண்ட் முதல்வர் தாமி, ஹரித்வாரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கடற்படை வீரர்களுடன் இணைந்து யோகாவில் ஈடுபட்டார். இந்திய ராணுவ வீரர்கள் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யோகா செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாமல்லபுரத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். கோவை வாலாங்குளம் பகுதியில் பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் ஏராளமானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us