தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி மேம்படுத்த வேண்டும்

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி மேம்படுத்த வேண்டும்

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி மேம்படுத்த வேண்டும்


UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM

ADDED : ஜூலை 05, 2023 10:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM ADDED : ஜூலை 05, 2023 10:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி :
அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் விரிவாக்கம் செய்துள்ள நிலையில், அதற்கேற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் புத்தகம் முதல் மதிய உணவு வரை அனைத்தும் இலவசமாக வழங்கினாலும், செயல்வழிக் கற்றல் உள்ளிட்ட புதிய கற்றல் முறைகளை அறிமுகம் செய்தாலும் தனியார் பள்ளிகள் வாசலில் சீட்டு கேட்டு காத்திருப்பதையே பெற்றோர் பெருமையாக கருதுகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வந்தது. குறிப்பாக அரசு தொடக்கப் பள்ளிகள் தள்ளாட்டம் கண்டன. அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகத்துக்குப் பின்னரும் பெற்றோர் மத்தியில் தனியார் பள்ளி மீதான மோகம் குறையவில்லை என்பதுதான் மிதமிஞ்சிய சோகம். இந்நிலையில், கொரோனாவிற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. 20 ஆயிரம் மாணவர் வரை கூடுதலாக சேர்ந்துள்ளனர். இந்தாண்டு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் 6,7,8,9 மற்றும் பிளஸ்1 வரை விரிவாக்கம் செய்துள்ளதால், மாணவர் சேர்க்கை மேலும் அதிகரித்துள்ளது.குறிப்பாக கிராம அரசு பள்ளிகளில் 6ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 30 பேர் இருந்த பள்ளிகளில் 60 முதல் 100 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் அதிகரித்துள்ள மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப இன்னும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. கும்பலாக இட நெருக்கடியில் அமர வைத்துள்ளனர். 60 பேர் கொண்ட வகுப்பினை இரண்டாக பிரித்து கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளையும், கல்வி தரத்தையும் மேம்படுத்துவது மிகவும் முக்கியம். அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., சீட் வாங்க பட்ட பாடு பெற்றோர்களுக்குத்தான் தெரியும். விண்ணப்பம் வாங்குவதற்கே இரவு எல்லாம் வீதியில் படுத்துறங்கும் அளவுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களை ஆட்டிப்படைத்தது. எவ்வளவு சலுகைகளை அறிவித்தாலும், கூவி கூவி அழைத்தாலும் அரசு பள்ளிகளுக்கு வரவில்லை. ஆனால் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் விரிவாக்கம் அரசு பள்ளிகளின் மகத்துவதை புரிய செய்து, மீண்டும் அரசு பள்ளிகள் பக்கம் திரும்ப செய்துள்ளது. அரசு பள்ளிகள் விஷயத்தில் இது நல்ல மாற்றம் தான்.இருப்பினும் இதனை எத்தனை அரசு பள்ளிகள் எப்படி தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரித்து கொள்ள போகின்றன என்று தெரியவில்லை. மாணவர் சேர்க்கை அதிகரித்துவிட்டது என மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. தரமான கல்வி விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை எனில், அதிகரித்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை சில ஆண்டுகளில் மீண்டும் குறைந்துவிடும். மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலை ஏற்படும்.மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி தரமான கல்வியை போதித்தால் மட்டுமே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தால் தானாக கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இழந்த பெருமைகளை அரசு பள்ளிகள் மீண்டும் மீட்டெடுக்க முடியும். இந்த பயணத்தை நோக்கி எத்தனை அரசு பள்ளிகள் நகர போகின்றன என்பது பள்ளி கல்வித் துறையின் கையில் தான் உள்ளது.மன மாற்றம் ஏன்: கல்வியாளர்கள் பளீச்
பெற்றோர்களிடம் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் நுழைவுத் தேர்வுகளே என்கின்றனர் கல்வியாளர்கள். அவர்கள் கூறுகயில், கல்வி பற்றி பெற்றோர்களின் மனநிலையே வேறுமாறி உள்ளது. தங்களுக்கு தான் நல்ல அடிப்படை கல்வி கிடைக்கவில்லை. தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வேண்டும்; நாலு வார்த்தை இங்கிலீஷில் பேச வேண்டும் என்று கான்வென்டில் சேர்க்கின்றனர். தங்களது சக்திக்கு மீறியது என தெரிந்தாலும், சமாளித்து கொள்ளலாம் என கடன் வாங்கி படிக்க வைத்தனர். ஆனால் அதே கல்வி தற்போது அரசு பள்ளி சி.பி.எஸ்.இ., வடிவில் கிடைப்பதால் மீண்டும் அரசு பள்ளிகளை தேடி வர துவங்கியுள்ளனர். மேலும், நுழைவு தேர்வும் ஒரு காரணம். இன்று, எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து முக்கிய படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வந்துவிட்டது. எதிர்காலத்தில் அனைத்து படிப்புகளும் நுழைவுத் தேர்வு வந்துவிடும். தமிழக பாடத்திட்டத்தை படித்துவிட்டு மீண்டும் நுழைவு தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., பாட புத்தகத்தை படிக்க வேண்டியுள்ளது. அதற்கு நேரடியாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலேயே சேர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு பெற்றோர்கள் வந்துள்ளதாக கூறுகின்றனர்.கணக்கெடுப்பு
பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவது உண்மை. எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் என்பதை முழுமையாக கணக்கெடுத்து வருகிறோம். 8 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும் முழுவிபரம் செப்டம்பர் மாதம் தெரியும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us