தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு மாணவருக்கு இலவச கல்வி

குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு மாணவருக்கு இலவச கல்வி

குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு மாணவருக்கு இலவச கல்வி


UPDATED : ஜன 07, 2010 12:00 AM

ADDED : ஜன 07, 2010 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2010 12:00 AM ADDED : ஜன 07, 2010 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர, கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்து, சம்பந்தபட்ட மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும். ஜாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், வரும் கல்வியாண்டு முதல், அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த புதிய திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று துவங்கிய தமிழக சட்டசபையின் கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.


மேலும், தேசிய இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உயர்நிலைப் பள்ளிகளை மேம்படுத்தி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கல்வி தரமானதாகவும், சீரானதாகவும் அமைய, சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடக்கும் தேர்வுகளில், தமிழக மாணவர்களின் போட்டியிடும் திறனை மேம்படுத்தவும், சமச்சீர் கல்வி திட்டம் உதவும். புரட்சிகரமான இத்திட்டம் வெற்றிபெற, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


பட்டதாரி இல்லாத குடும்ப மாணவருக்கான கல்விச்செலவை அரசே ஏற்கும் திட்டம் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும். இது உயர்கல்வி பெற கல்வி அறிவு இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாகவும் இருக்கும். கல்விக்கடன் பெற அலைய வேண்டிய தொந்தரவும், கடனை திரும்ப செலுத்த வேண்டிய சுமையும் பெரும்பாலானோருக்கு இருக்காது. தொழிற்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமின்றி, பள்ளிக் கல்வியை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் இதன்மூலம் கணிசமாக உயரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us