தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச அளவில் சாதிக்க காத்திருக்கும் ஊனமுற்றோரின் தவிப்பு

சர்வதேச அளவில் சாதிக்க காத்திருக்கும் ஊனமுற்றோரின் தவிப்பு

சர்வதேச அளவில் சாதிக்க காத்திருக்கும் ஊனமுற்றோரின் தவிப்பு


UPDATED : ஜன 07, 2010 12:00 AM

ADDED : ஜன 07, 2010 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2010 12:00 AM ADDED : ஜன 07, 2010 06:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சாதனை புரிய ஊனம் ஒரு தடை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், கோவையை சேர்ந்த உடல் ஊனமுற்ற நான்கு இளைஞர்கள் சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர்.


கால்கள் ஊனமுற்ற நிலையிலும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்துக் காட்டியுள்ளனர் கோவையை சேர்ந்த கன்னியப்பன், முத்தரசி, இப்ராகிம் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய நான்கு இளைஞர்கள். குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தேசிய அளவில் திறமையை வெளிப்படுத்தியுள்ள இந்த சாதனை இளைஞர்கள், பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.


உடல் திறனின் அடிப்படையில் முதல் மூன்று இடத்தை பிடித்த இந்த நால்வரும் அடுத்தபடியாக, துபாயில் பிப்., 8ம் தேதி முதல் 13 வரை நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கால்களில் ஊனம் இருந்தாலும் கைகள், தோள்களுக்கு வலு சேர்க்கும் சிறப்பு பயிற்சி பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளனர்.


இப்போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளதன் மூலம், கோவையில் இருந்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படும் முதல் அணி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். உடல் ஊனம் எனும் தடையை எளிதில் தகர்த்து கடல் கடந்து சாதனை புரிய தயாராகி விட்ட இவர்களால், பொருளாதார தடையை அவ்வளவு எளிதாக சமாளிக்க முடியவில்லை. ஏழை குடும்பங்களை சேர்ந்த இவர்கள் துபாய் சென்று வர ஆகும் செலவை சமாளிக்கும் வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.


இது பற்றி இவர்கள் கூறுகையில், “சர்வதேச போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. துபாய் செல்லும் பயணக் கட்டணம், நுழைவுக் கட்டணம், தங்குமிட செலவு ஆகியவற்றுக்கு ஒரு நபருக்கு 58 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.


ஒவ்வொருவரும் இவ்வளவு பெரிய தொகையை புரட்ட முடியாததால், போட்டியில் பங்கேற்கும் வழி தெரியாமல் தவிக்கிறோம். தனியார் நிறுவனத்தினர், தொழிலதிபர்களிடம் பண உதவி கேட்டு அலைகிறோம். உதவும் நிறுவனம் விரும்பினால் அந்நிறுவனத்தின் பெயர் பொறித்த ‘டிசர்ட்’களை சர்வதேச போட்டிகளில் அணிந்து விளையாட தயாராக உள்ளோம்,” என உருக்கமுடன் கூறினர்.


கோவையின் பெருமையை பறைசாற்ற விழாக்கள் நடத்தி கொண்டாடும் தொழிலதிபர்களின் பார்வை, சர்வதேச அளவில் இந்நகருக்கு பெருமை தேடி தரத் தயாராக உள்ள இந்த சாதனை இளைஞர்கள் பக்கம் திரும்புமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us