தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தவறான தணிக்கையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தவறான தணிக்கையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தவறான தணிக்கையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் செந்தில்வடிவு வரவேற்றார். இதில், திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் தவறான தணிக்கை தடையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்; தணிக்கை பிரிவு அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; இதனால் பாதிக்கப்பட்டுள்ள, 99 ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டும்; மூத்தோர்- இளையோர் ஊதிய முரண்பாடுகளை கலைந்திடும் வகையில், நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள, மூன்று ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும்; தவறான தணிக்கை தடையால் பாதிக்கப்பட்டு, அரசு கணக்கிற்கு செலுத்தியுள்ள பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாயை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us