தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர் மோடி

அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர் மோடி

அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர் மோடி


UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM

ADDED : ஜூலை 30, 2023 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM ADDED : ஜூலை 30, 2023 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறவைடைவதை ஒட்டி, புதுடில்லியில் அகில பாரதிய சிக் ஷா சமகம் எனப்படும், அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.இதில் அவர் பேசியதாவது:
மாணவர்களை, அவர்களது திறமையின் அடிப்படையில் மதிப்பிடுவதை தவிர்த்து, மொழிகளின் அடிப்படையில் மதிப்பிடுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி. நாட்டை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவது தான், புதிய கல்வி கொள்கையின் நோக்கம். பாரம்பரிய அறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்துக்கும் புதிய கல்வி கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.புறக்கணிப்பு
புதிய தேசிய கல்வி கொள்கையில் நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். சுயநலத்துக்காக மொழியை வைத்து அரசியல் செய்பவர்கள், அந்த போக்கை கைவிட வேண்டும். தாய்மொழியில் கல்வி கற்பிப்பது, நம் நாட்டில் மாணவர்களுக்கு ஒரு புதிய நீதி வடிவத்தை கொடுக்கிறது. இது, சமூக நீதியை நோக்கிய பயணத்தின் முக்கிய படியாக இருக்கும். உலகின் பல நாடுகள், குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகள் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் உள்ளூர் மொழிகளையே அதிகம் பயன்படுத்துகின்றன.நம் நாட்டில் ஏராளமான மொழிகள் உள்ளன. ஆனால் அவை, பின்தங்கிய நிலையின் அடையாளமாக சித்தரிக்கப் படுகின்றன. ஆங்கிலம் தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களின் திறமை அங்கீகரிக்கப்படுவது இல்லை. இதன் விளைவாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். புதிய தேசிய கல்வி கொள்கையின் வாயிலாக, இந்த நிலை தவிர்க்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையில் கூட, நான் இந்திய மொழியில் தான் பேசுகிறேன். சமூக அறிவியலில் இருந்து, பொறியியல் வரை அனைத்து பாடங்களையும் இந்திய மொழிகளில் கற்பிக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. மாணவர்கள் ஒரு மொழியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளபோது, அவர்களது திறமைகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படும். புதிய வாய்ப்புகளுக்கான தளமாக இந்தியாவை பல நாடுகள் கருதுகின்றன.அழைப்பு
இதனால் தான் பல நாடுகள், ஐ.ஐ.டி., வளாகத்தை தங்கள் நாடுகளில் அமைக்கும்படி நமக்கு அழைப்பு விடுகின்றன. உலகில் உள்ள பல பல்கலைகளும் நம்மை அணுகுகின்றன. பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம், பசுமை எரிசக்தி ஆகியவற்றை, பள்ளிகள் பாடத் திட்டமாக வைக்க வேண்டும். இவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியின் போது, மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிட்டார். பிரதமர் ஸ்ரீ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியையும் விடுவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us