தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ., படித்தால் வேலை நிச்சயம்: அமைச்சர் உறுதி

ஐ.டி.ஐ., படித்தால் வேலை நிச்சயம்: அமைச்சர் உறுதி

ஐ.டி.ஐ., படித்தால் வேலை நிச்சயம்: அமைச்சர் உறுதி


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஐ.டி.ஐ., படித்தால் வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.கோவையில் உள்ள தொழில்நுட்ப மையத்தில்,தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, 71 இடங்களில், தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெற்றால் கிடைக்கும் தகுதியை, தமிழகத்திலேயே கிடைப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. வேலையில்லை என்ற சொல்லை போக்குவதற்காக, அரசு கலை கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, ஐ.டி.ஐ.,யில் படிப்பவர்கள், படித்து முடித்ததும் வேலைக்குச் செல்லும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பெயிலானவர்களே ஐ.டி.ஐ., படிப்பார்கள் என்கிற நிலை முன்பிருந்தது. அந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கி, ஐ.டி.ஐ.,யில் படிப்பவர்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. பி.இ.,  எம்.பி.ஏ., முடித்தவர்கள் கூட, ஐ.டி.ஐ.,யில் சேர்ந்திருக்கிறார்கள். நடப்பாண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 95 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, அமைச்சர் கணேசன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us