தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்ந்த குறிக்கோள் உடையவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்

உயர்ந்த குறிக்கோள் உடையவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்

உயர்ந்த குறிக்கோள் உடையவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்


UPDATED : ஜன 10, 2010 12:00 AM

ADDED : ஜன 10, 2010 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2010 12:00 AM ADDED : ஜன 10, 2010 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ்
மற்றும் ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மனேஜ்மென்ட் ஸ்டடீஸின் 16வது ஆண்டு
விழாவில் மாணவர் விஸ்வபிரசாத் வரவேற்றார். உணவு கலைத்துறை தலைவர் பாலாஜி வாழ்த்து கடிதங்களை வாசித்தார்.

கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது:  கல்வி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். கல்லூரி 16 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி வருகிறது. படிப்புகள் மாணவர்களுக்கு நல்ல வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பை தருகின்றன. ஓட்டல் நிர்வாகம் படிப்பவர்களுக்கு கப்பல் துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதை மனதில் வைத்து மெரிடைம் ஆஸ்பிடாலிட்டி ஸ்டடீஸ் என இப்படிப்பு பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பி.எஸ்.சி., (அனிமேஷன்), பி.காம் (பாங்கிங் மற்றும் இன்சூரன்ஸ்) படிப்புகள் துவங்கப்பட்டன. அனிமேஷன் துறையில் 2010ல் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. 1000 கிலோ துணிகளை துவைக்கும் தானியங்கி சலவையகம் ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. இது டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் துவக்க உதவியாக இருக்கும். மேலும் டிஜிட்டல் வீடியோ புரடக்ஷன், சவுன்ட் மற்றும் எடிட்டிங் குறித்த மூன்றாண்டு படிப்பு,தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த படிப்பும் துவங்கப்படவுள்ளன. இவற்றை படிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

டில்லி சாலை போக்குவரத்து கல்வி கழகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.  இவ்வாறு பேசினார்.

சிட்டி யூனியன் பாங்க் நிர்வாக இயக்குனர் எஸ்.பாலசுப்ரமணியன் குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசியதாவது:

சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு ஏற்பட்ட போதும், இந்தியாவில் சிறந்த மேலாண்மை காரணமாக பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. கல்வி நிறுவனங்கள் கால மாற்றங்களுக்கு ஏற்ப திறமையான மாணவர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். வாய்ப்புகள் நிறைந்ததாக உலகம் உள்ளது. அவற்றை மாணவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். உலகத்தை அச்சுறுத்தும் பாதிப்புகள் 90 சதவீதம் மனித தவறுகளால் ஏற்படுகிறது. மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சமூக பொறுப்புள்ள உயர்ந்த குறிக்கோளை உடையவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும். பிறருடைய கருத்துக்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். என்ன செய்கிறோம்? எப்படி செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? என்ற மூன்று கேள்விகளைநாம் நமக்குள்ளேயே கேட்டு கொண்டு தன்னம்பிக்கை மற்றும் திறமையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றியையும், புகழையும் பெறலாம். இவ்வாறு பேசினார்.

தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜி.ஆர்.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி முதல்வர் ஆர்.சீனிவாசன், ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குனர் எம்.டி.மனோகரன் ஆண்டறிக்கை வாசித்தனர்.  கல்லூரி செயலாளர் எல்.ராமசுப்பு, பயிற்சி நிர்வாகி ஆர்.ராம்குமார், கேப்டன் ஜெயராமன், சிட்டி யூனியன் பாங்க் உதவி பொது மேலாளர் பாலசுப்ரமணியன், விழாவில் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும், சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி ஹேமா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us